விருதுநகரில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

விருதுநகரில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
நலத்திட்ட உதவிகள் வழங்கல் 
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் மானிய திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு ரூ.10,80,000 மதிப்பிலான மானியத்துடன் கூடிய கடனுதவிகளையும்,

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு ரூ.10 இலட்சம் மதிப்பிலான மானியத்துடன் கூடிய கடனுதவியையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மூலம் 5 பயனாளிகளுக்கு விலையில்லா தேய்ப்பு பெட்டிகளையும், 4 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்களையும்,

மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் 20 பயனாளிகளுக்கு தலா ரூ.13,700/- மதிப்பில் மொத்தம் ரூ.2,74,000/- மதிப்பிலான விலையில்லா திறன்பேசி (Smartphone)களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

Tags

Next Story