குமரியில் ஜூன் 10 இல் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் !!

குமரியில் ஜூன் 10 இல் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் !!

ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா்

கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை (ஜூன் 10) நடைபெறுகிறது. இது குறித்து, மாவட்டஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் அறிவிப்பு.
கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை (ஜூன் 10) நடைபெறுகிறது. இது குறித்து, மாவட்டஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் விலக்கப்பட்டுள்ளதால், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறும் மக்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டம், வரும் திங்கள்கிழமை (ஜூன் 10) ஆட்சியா் அலுவலக லூயிஸ் பிரெயிலி கூட்ட அரங்கில் காலை 10 மணியளவில் நடைபெறும். பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் அளிக்கலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags

Next Story