விருதுநகரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்..!

விருதுநகரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்..!
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சிமன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.

அதில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.

முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் அறிவுறுத்தினார்கள். இக்கூட்டத்தில், வெம்பக்கோட்டை வட்டம், கங்கர்செவல் கிராமத்தில் திருமதி அம்மாபொன்னு என்பவரின் மகன் நீரில் மூழ்கி உயிரிழந்ததால், அவருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.1 லட்சம் நிவாராணத் தொகைக்கான காசோலையையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,19,100/- மதிப்பில் செயற்கை கால்களையும், 1 பயனாளிக்கு ரூ.13,750 மதிப்பிலான திறன் பேசியும் என மொத்தம் ரூ.2,32,850 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவயர் ஜெயசீலன் வழங்கினார்.

மேலும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் 2022-2023 ஆம் ஆண்டில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.37.15 கோடி கடனுதவி வழங்கிய விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு மாவட்ட அளவிலான சிறந்த வங்கிக்கான விருது மற்றும் நற்சான்றிதழையும், 2022-2023 ஆம் ஆண்டில் மாவட்ட அளவில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அதிகமாக கடனுதவி வழங்கிய சிறந்த கிளை வங்கிகளில் ரூ.5.18 கோடி கடனுதவி வழங்கிய செட்டியார்பட்டி யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கு முதல் பரிசாக ரூ.15,000/- மற்றும் நற்சான்றிதழையும், ரூ.3 கோடி கடனுதவி வழங்கிய அருப்புக்கோட்டை கனரா வங்கிக்கு இரண்டாம் பரிசாக ரூ.10,000/- மற்றும் நற்சான்றிதழையும், ரூ.2.50 கோடி கடனுதவி வழங்கிய மல்லி இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு மூன்றாம் பரிசாக ரூ.5,000/- மற்றும் நற்சான்றிதழையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் வழங்கினார்.

Tags

Next Story