நாகை எஸ்.பி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம்

நாகை எஸ்.பி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம்

குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

நாகை எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது.

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்புநாளில் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்கள் மத்தியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தி வருவதாக சமூக வலைதளங்களில் பரவப்படும் வதந்தி பற்றிய விழிப்புணர்வு நாகப்பட்டினம் மாவட்ட காவல்,

அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் பொதுமக்களை சந்தித்து அவர்ளின் குறைகளை கேட்டறிந்து 18 மனுக்களை பெற்றார்கள் பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்கள். மேலும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் குழந்தை கடத்தல் செய்வதாக உண்மைக்கு மாறான தகவல் பேசப்பட்டும், சமுக வலைதளங்களில் பரப்பப்பட்டும் வருகிறது, நாகப்பட்டினம் மாவட்டம்,

நாகப்பட்டினம் நகர காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட ஜெகநாதபுரம் கிராமத்தை சேர்ந்த இளம் பெண் தாக்கப்பட்டதை, வட இந்தியர்கள் இரண்டு பேர் பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்துவதாக பொய்யான தகவல் சமுக வலைதளங்களில் (Whatsapp) முலம் பரப்பப்பட்டு வருகிறது.

இவ்வாறான குழந்தை கடத்தல் பற்றி பரவி வரும் தகவல் அனைத்தும் உண்மைக்கு மாறானது. இதுவரை குழந்தைகள் காணாமல் போனது மற்றும் கடத்தப்பட்டது பற்றிய எந்த ஒரு புகாரோ, தகவலோ வரவில்லை. எனவே பொதுமக்கள் யாரும் அச்சமடைய தேவையில்லை. குழந்தைகள் கடத்துவதாக வரும் புகைப்படங்கள். வீடியோக்கள் அனைத்தும் போலியானவை. பொய்யான செய்திகளை சமூக வலைதளங்களில் யாரும் பரப்பவேண்டாம். மேலும், அவ்வாறு பரப்புவர்களின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும்.

மேலும், பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் உடனடியாக அவசர உதவி எண் 100 அல்லது உங்கள் எஸ் பி யுடன் பேசுங்கள் 8428103090 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் என நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மக்கள் குறைதீர்க்கும் மனு நாளில் வந்திருக்கும் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் ஒவ்வொரு வாரம் புதன்கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் மனு நாள் நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்கள்.

பொதுமக்கள் காவல்துறையிடம் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவிக்க உங்கள் எஸ்.பி யுடன் பேசுங்கள்: 8428103090 என்ற தொலைபேசி எண் மூலம் கள்ள சாராய விற்பனை கஞ்சா விற்பனை மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள பிரச்சனைகள் குறித்தும் புகார் தெரிவிக்கலாம் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள், காவல்துறையினர் கலந்து கொண்டனர்

Tags

Next Story