ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்து 53 மனுக்கள் பெறப்பட்டன. 

ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்து 53 மனுக்கள் பெறப்பட்டன.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் கோட்டாட்சியர் 53 கோரிக்கை மனுக்களை பெற்று அந்தந்த துறைக்கு அனுப்பி வைத்தார். ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் தனலட்சுமி தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத் தில் பட்டா வழங்க, பட்டா பெயர் மாற்றுவது, இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரியும், ஆக்கிரமிப்பு அகற்றவும், கலைஞர் மகளிர் நிதியுதவி, உட்பிரிவு செய்து பட்டா வழங்க கோரி, விதவை உதவித்தொகை வழங்க கோரி, முதியோர் உதவித்தொகை என 53 மனுக்களை கோட்டாட்சியரிடம் வழங்கினர். அம்மனுக்களை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர் தனலட்சுமி அந்தந்த துறை அதிகாரிகளுக்கு அனுப்பி உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். உடன் கோட்டாச்சியரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார் இருந்தார்.

Tags

Next Story