ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்
குறைதீர் முகாம்
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமையில் குறைத்தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலவச பட்டா வேண்டி, பட்டா திருத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பொது மக்கள் தங்களது மனுக்களை வழங்கினர். இம்மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர் உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடம் வழங்கிய உரிய முறையில் விசாரணை மேற்கொண்டு மனுவின் மீது தீர்வு காணும்படி உத்தரவிட்டார். இந்த நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முரளி, காவல்துறை ஆணையாளர் வரதராஜன், ஆதி திராவிடர் நல அலுவலர் பூங்கொடி, சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் ஸ்ரீ வள்ளி உட்பட பலர் உடன் இருந்தனர்.
Tags
Next Story