வேலூரில் மக்கள் குறை தீர் கூட்டம்!

வேலூரில்  மக்கள் குறை தீர் கூட்டம்!

குறைதீர் கூட்டம் 

வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் மக்கள் குறைவு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மனு அளிப்பதற்காக பொதுமக்கள் வந்திருந்தனர். அவர்களிடம் மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story