மக்கள் குறை தீர்வுநாள் நாள் கூட்டம்

மக்கள் குறை தீர்வுநாள் நாள் கூட்டம்

நலத்திட்ட உதவிகள் வழங்கல்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
குமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (30.10.2023) மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 440 கோரிக்கை மனுக்கள் இன்று பெறப்பட்டது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், அறிவுறுத்தினார். அதனைத்தொடர்ந்து தோவாளை அருகே வீரநாராயணமங்கலம் பகுதியை சார்ந்த ராஜன் என்பவர் 25.07.2021 அன்று நீரில் மூழ்கி உயிரிழந்ததற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 1 இலட்சத்திற்கான காசோலையினை அன்னாரின் தாயார் கோமதியிடமும், மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.13 ஆயிரத்து 459 மதிப்பில் 1 பயனாளிக்கு திறன்பேசியும், ரூ.9 ஆயிரத்து 50 மதிப்பில் 1 பயனாளிக்கு மூன்று சக்கர சைக்கிள் என மொத்தம் ரூ.22 ஆயிரத்து 509 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) குழந்தை சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story