இனி வழக்கம்போல் மக்கள் குறை தீர் கூட்டம் - ஆட்சியர்

இனி வழக்கம்போல் மக்கள் குறை தீர் கூட்டம் - ஆட்சியர்

ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ்

தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதால் இனி வழக்கம்போல் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும் என நாகை மாவட்ட ஆட்சி தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்ட ஆட்சி தலைவர் ஜானி டாம் வர்கீஸ்ட வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் திங்கள்கிழமை தோறும் நடைபெற்று வந்த மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம் தேர்தல் நடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்பட்டதால், எதிர்வரும் 10.06.2024 அன்று திங்கள் முதல் வழக்கம் போல் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக முதன்மை மாநாட்டு கூட்டரங்கில் நடைபெறுவதால், பொதுமக்கள் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் அளித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.

Tags

Next Story