மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் இன்று நடைபெறாது
ஆட்சியர் அலுவலகம்
மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்தாலும், வாக்கு எண்ணிக்கை முடிவு வெளியாகும் வரை மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம்தோறும் திங்கள்கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும். ஆனால் மக்களவை தேர்தலை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறவில்லை. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் முடிவடைந்தாலும் வாக்கு எண்ணிக்கை வருகின்ற ஜூன் 2ஆம் தேதி நடைபெற உள்ளதால் திருநெல்வேலி மாவட்டத்தில் இன்னும் தேர்தல் நடத்தைகள் அமலில் உள்ளது. எனவே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறாது.
Next Story