திருச்சிற்றம்பலத்தில் மக்கள் நேர்காணல் முகாம்

திருச்சிற்றம்பலத்தில் மக்கள் நேர்காணல் முகாம்

நலத்திட்ட உதவிகள் வழங்கல் 

திருச்சிற்றம்பலம் மக்கள் நேர்காணல் முகாமில் 100 பயனாளிகளுக்கு ரூ.20.96 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், திருச்சிற்றம்பலம் கிழக்கு ஊராட்சியில், முத்துமாரி திருமண மண்டபத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் மக்கள் நேர்காணல் முகாம் மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம் எடுப்பு) ஆர்.ஜனனி சௌந்தர்யா தலைமையில் பநடைபெற்றது.

பட்டுக்கோட்டை வருவாய், கோட்டாட்சியர் கு.சு.ஜெயஸ்ரீ வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் 1 பயனாளிக்கு வீட்டுமனைப் பட்டா, இயற்கை மரணமடைந்த 50 பேரின் வாரிசுதாரர்களுக்கு ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.11 இலட்சத்து 22 ஆயிரத்து 500, 15 பயனாளிகளுக்கு சமுதாய முதலீட்டுக் கடனுதவி ரூ.8 இலட்சத்து 70 ஆயிரம்,

10 பேருக்கு விதை கிராம திட்டத்தின்கீழ் ரூ.8,946, 4 பேருக்கு பழக்கன்று தொகுப்பு ரூ. 25 ஆயிரத்து 220, மாற்றுத் திறனாளிகள் 3 பேருக்கு இயற்கை மரணம் ஈமச்சடங்கு நிதியுதவி மற்றும் வங்கி கடனுதவி ரூ.59 ஆயிரம், 17 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணைகள் என மொத்தம் 100 பயனாளிகளுக்கு ரூ. 20 லட்சத்து 96 ஆயிரத்து 786 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ,

வழங்கி மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம் எடுப்பு) ஆர்.ஜனனி சௌந்தர்யா பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து தரப்பு மக்களின் வாழவாதாரம் உயர்ந்திட ஏராளமான நலத்திட்டங்களை வழங்கியுள்ளார். மாவட்ட நிர்வாகம் சார்பில், மக்கள் நேர்காணல் முகாம் கிராமங்களில் நடைபெறுவதன் மூலம் அனைத்து துறை அலுவலர்கள் துறை சார்ந்த திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும் பொதுமக்களின்,

கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கும் இம்முகாம்கள் நடத்தப்படுகிறது. பொதுமக்கள் அரசின் திட்டங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) எஸ்.சங்கர், இணை இயக்குநர் (வேளாண்மை) (பொ) சுஜாதா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் முத்துகிருஷ்ணன்,

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், ஊராட்சி உதவி இயக்குநர் சதாசிவம் அவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் அ.முர்த்தி, ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஆல்பர்ட் குணாநிதி, திருச்சிற்றம்பலம் கிழக்கு ஊராட்சித்தலைவர் மு.மோகன், வட்டாட்சியர் த.சுகுமார் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story