மக்கள் நீதி மைய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் நியமனம்

மக்கள் நீதி மைய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் நியமனம்

மாவட்ட அமைப்பாளராக நியமனம்


குமாரபாளையம் நகர மகளிர் அணி செயலர், மாவட்ட மகளிரணி அமைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

குமாரபாளையம் மக்கள் நீதி மைய மகளிர் அணி செயலராக செயல்பட்டு வந்தவர் சித்ரா. இவர் நகரில் உள்ள 33 வார்டுகளில் கட்சி நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் ஆகியோர் மின் விளக்கு எரியாமை, குடிநீர் வராதிருத்தல், குடிநீர் குழாய் சேதம், சாலை வசதி, கழிப்பிட வசதி, குப்பைகள் அகற்றாமல் இருப்பது, வடிகால் தூய்மை பணி, உள்ளிட்ட பல பணிகள் குறித்து யார் எந்த புகார் குறித்து கூறினாலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு, குறைகள் பற்றி கூறி, உடனே நிவர்த்தி செய்து கொடுத்து வந்தார். இதனால் மாற்றுக்கட்சியினரும் இவர் வசம் தங்கள் குறைகளை கூறி வந்தனர்.

பாரபட்சம் பாராமல் சித்ரா மக்கள் பணியாற்றி வந்தார். மேலும் ரத்தம் வேண்டும் என்றால், உடனே அதற்குரிய ஆளை ஏற்பாடு செய்து அந்தந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, உரிய நபருக்கு ரத்தம் கொடுத்து, பல உயிர்களை காப்பாற்றி வருகிறார். இவரது சேவைப்பணிகள் குறித்து தகவலறிந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமலஹாசன், நாமக்கல் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளராக சித்ராவை நியமனம் செய்துள்ளார். இவரை அந்த கட்சி நிர்வாகிகள், பிற கட்சி நிர்வாகிகள், பொதுநல ஆர்வலர்கள், நகரின் முக்கிய பிரமுகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இது குறித்து சித்ரா கூறியதாவது: என்னிடம் உதவி என்று வருவோருக்கு என்னால் ஆனா உதவியை செய்து வருகிறேன். எனது இந்த செயலை அங்கீகரிக்கும் விதமாக கட்சியின் நிறுவனர் எனக்கு மாவட்ட அமைப்பாளர் பொறுப்பு கொடுத்தது மிகுத்த மகிழ்ச்சியை கொடுத்து வருகிறது. இனியும் தொடர்ந்து மக்கள் பணி செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story