மேக்னசைட் சுரங்கத்திற்கு எதிராக மக்கள் மனு

மேக்னசைட் சுரங்கத்திற்கு எதிராக மக்கள் மனு

மக்கள் மனு

மேக்னசைட் சுரங்கத்திற்கு எதிராக கலெக்டர் பிருந்தாதேவியிடம் எம்எல்ஏ தலைமையில் பொதுமக்கள் மனு அளித்தனர்.

சேலம் மாவட்டம் தேக்கம்பட்டி, மூங்கில்பாடி வெள்ளாளப்பட்டி, கொல்லப்பட்டி, சக்கரசெட்டிபட்டி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் அருள் எம்.எல்.ஏ. தலைமையில் கலெக்டர் பிருந்தாதேவியை சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- மேற்கண்ட ஊராட்சிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறோம். விவசாயம் மற்றும் கால்நடைகளை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. இதற்கு நிலத்தடி நீர் மூலம் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறோம். தேக்கம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு மேக்னசைட் நிறுவன சுரங்கத்தில் இருந்து நிலத்தடி நீரை வெளியேற்ற நிர்வாகம் சார்பில் ராட்சத குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இவ்வாறு நிலத்தடி நீரை வெளியேற்றினால் சுரங்கத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் சுற்றுவட்டார பகுதியில் 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாதிப்படையும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட திறந்தவெளி கிணறுகள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வடிந்து வறட்சி ஏற்படும். இதனால் விவசாயம், கால்நடைகள் பாதிப்படையும். எனவே மேக்னசைட் நிறுவனத்தில் உள்ள சுரங்கத்தில் இருந்து நிலத்தடி நீர் வெளியேற்றும் திட்டத்தை கைவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தனர். இதுகுறித்து அருள் எம்.எல்.ஏ. கூறுகையில், நிலத்தடி நீரை வெளியேற்றும் திட்டத்தை மேக்னசைட் நிறுவனம் கைவிடாவிட்டால் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

Tags

Next Story