பெரம்பலூர் : 7 கிலோ எடை கொண்ட வெண்கல அம்மன் சிலை கண்டெடுப்பு

அம்மன் சிலை
பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் கோனேரிபாளையம் கிராமம் கிளை ஆற்றின் அருகே, உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் கோனேரி பாளையத்தைச் சேர்ந்த மஞ்சுளா 45, என்பவர் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார்.அப்போது அங்கு நடந்து செல்லும் பொழுது காலில், ஏதோ இடித்துள்ளது. என்ன என்று பார்த்த போது அம்மன் சிலை இருந்துள்ளது.இதனை அடுத்து அவர் இது குறித்து ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சக்திவேலுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த சக்திவேல் சிலையை வெளியே எடுத்து பார்த்தபோது ஒரு அடி உயரம் சுமார் 7 கிலோ எடை கொண்ட அம்மன் சிலை என்பது தெரிந்தது. இதனை அடுத்து அவர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருக்கு தகவல் தெரிவித்துள்ளார் இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் சிலையை சுத்தம் செய்து பார்த்தபோது அது வெண்கல சிலை என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து கோனேரி பாளையம் துணைத் தலைவர் சக்திவேல் தலைமையில் பொதுமக்கள் பால் மஞ்சள் அபிஷேகம் செய்து கற்பூரம் ஏற்றி அம்மன் சிலையை வணங்கி அதை வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவழகன் முன்னிலையில் கிராம நிர்வாக அலுவலர் அகிலனிடம் ஒப்படைத்தனர், அப்பகுதியில் மழைநீர் வடிவதற்காக ஜே சி பி எந்திரம் கொண்டு வாரி அமைத்துள்ளனர், அப்போது மண்ணில் புதைந்திருந்த சிலை, வெளியே வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து. சிலையை வட்டாட்சியரிடம் காண்பித்து மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தனர்.
