ரூ.20.54 லட்சம் மதிப்பிலான துணிகள் பறிமுதல்
பெரம்பலூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.ரூ.20.54 லட்சம் மதிப்பிலான துணிகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர், இதில் பெரம்பலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் , மருதடி பிரிவு சாலையில் பறக்கும் படை குழுவினர் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது, அங்கு வந்து வாகனத்தை சோதனை செய்தபோது சென்னை சேர்ந்த சையது அமானுல்லா என்பவர், உரிய ஆவணம் இன்றி சட்டைகள் மற்றும் பேண்ட்கள், டி-ஷர்ட்டுகள் உள்ளிட்ட 20,54,854 ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டதை கைப்பற்றிய, பறக்கும் படை குழுவினர் பெரம்பலூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் பொருட்களை ஒப்படைத்தனர்.
Next Story