பெரம்பலூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் - கலெக்டர் வெளியீடு
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
பெரம்பலூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து கட்சி பிரமுகர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், குன்னம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளையும் உள்ளடக்கிய வரைவு வாக்காளர் பட்டியலை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் கற்பகம் அக்டோபர் 27ஆம் தேதி இன்று காலை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார். இதனை தொடர்ந்து அவர் தெரிவிக்கையில் பெரம்பலூர் குன்னம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளிலும் 652 வாக்குச்சாவடிகளும் 5,62 499 வாக்காளர்களும் உள்ளனர் என்றும் இதில் 2,76,491 ஆண் வாக்காளர்களும், 2,86,000 பெண் வாக்காளர்களும், இதரர் எட்டு வாக்காளர்களும் உள்ளனர் என்றும், மேலும் 18 வயது பூர்த்தி அடைந்துள்ள நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும் வரைவு வாக்காளர் பட்டியல் பெயர் திருத்தம் பெயர் நீக்கம் முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்வதற்காக சிறப்பு முகாம்கள் நவம்பர் 4,5 மற்றும் 18,19 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இதனை வாக்காளர்கள் முறையாக பயன்படுத்திக் கொண்டு பயனடைய வேண்டுமென மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியின் போது வருவாய் கோட்டாட்சியர் பொறுப்பில் உள்ள சத்தியபால கங்காதரன், மாவட்ட நேர்முக உதவியாளர் மஞ்சுளா, தேர்தல் வட்டாட்சியர் அருளானந்தம், பெரம்பலூர் வட்டாட்சியர் சரவணன், ஆலத்தூர் வட்டாட்சியர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட திமுக, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, பகுஜன் சமாஜ், உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story