பெரம்பலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை முகாம்

உறுப்பினர் சேர்க்கை முகாம்
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள தனியார் அரங்கில் பெரம்பலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. முகாமில் இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் விச்சு லெனின் பிரசாத் தலைமை வகித்தார், சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினர் ஜான் அசோக் வரதராஜன், மாநில செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.
இதில் காங்கிரஸ் கட்சியின் எதிர்கால பயணம் குறித்தும் இளைஞர்களை ஊக்குவிக்க ராகுல் காந்தியின் செயல்பாடுகள் குறித்தும் கூட்டத்தில் எடுத்துரைத்தனர் இதனை தொடர்ந்து, இளைஞர் காங்கிரஸ் மாநில மாநிலத் தலைவர் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள் காங்கிரஸ் கட்சியில் தங்களை உறுப்பினராக இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்று உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டன. மேலும் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சுரேஷ் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநிலச் செயலாளர் ராஜீவ் காந்தி, உள்ளிட்ட பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
