பெரம்பலூர் மாவட்டத்தில் வருவாய்த் தீர்வாயம்

பெரம்பலூர் மாவட்டத்தில்  வருவாய்த் தீர்வாயம்

ஜமாபந்தி

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் ஜமாபந்தி நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், குன்னம், வேப்பந்தட்டை, ஆலத்தூர் அகிய நான்கு வட்டங்களிலும் 1433-ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் - ஜமாபந்தி ஜூன் 18ஆம் தேதி இன்று காலை 10 மணி அளவில் தொடங்கி நடைபெற்றது.

குன்னம் வட்டத்திற்கான வருவாயத்தீர்ப்பாயம் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் கற்பகம், தலைமையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், வடக்கலூர் குறுவட்ட பகுதிக்கு உட்பட்ட திருமாந்துறை, பெண்ணகோணம், வடக்கலூர், ஒகளூர் சு.ஆடுதுறை மற்றும் அத்தியூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.

பின்னர் அனைத்துத்துறைகளின் அலுவலர்களிடமும் பேசிய மாவட்ட ஆட்சியர் தெரிவித்த போது, ஒவ்வொரு மனுக்களின் மீதும் தனிக்கவனம் செலுத்தி, மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட சம்மந்தப்பட் துறை அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ” நம்மைத் தேடி வரும் மக்களின் எதிர்பார்ப்பை, நமது நேர்மையான நடவடிக்கையின் மூலம் காப்பாற்ற வேண்டும். என தெரிவித்தார். பின்னர், இயற்கை மரண உதவித்தொகை, பட்டா மாறுதல், திருமண உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி வழங்கப்பட்ட மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டு, நலத்திட்ட உதவிகளுக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் கற்பகம் வழங்கினார்.

Tags

Next Story