பெரம்பலூர் : திமுக வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனை

திமுக முதன்மைச் செயலாளரும், நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சருமான கே.என்.நேரு, பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி, வாக்கு எண்ணிக்கை அடையாள அட்டையை வழங்கினார்.

பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் ஜூன் 3ஆம் தேதி இரவு, பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை முகவர்கர் 352 பேருக்கு, வாக்கு எண்ணிக்கையின் போது எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து திமுக முதன்மைச் செயலாளரும் நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சருமான கே.என்.நேரு ஆலோசனைகள் வழங்கினார்.

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பெரம்பலூர், துறையூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, குளித்தலை ஆகிய சட்டமன்றத் தொகுதியில் உள்ள வாக்கு எண்ணிக்கை முகவர்கள் 352 பேருக்கும் அடையாள அட்டைகளையும் கே.என்.நேரு வழங்கினார். இதில் திமுக வேட்பாளர் கே‌.என்.அருண்நேரு, மாவட்டச் செயலாளர்கள் காடுவெட்டி தியாகராஜன், வைரமணி, மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன் - சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் மற்றும் பெரம்பலூர் , கரூர், திருச்சி வடக்கு, திருச்சி மத்திய மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story