பெரம்பலூர் : மாற்றுத்திறனாளிகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்

சட்ட விழிப்புணர்வு முகாம்
தமிழ்நாடு மாநில சட்டபணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படியும், பெரம்பலூர் மாவட்ட சட்டபணிகள் ஆணைகுழுவின் தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமாகிய பல்கீஸ் ஆலோசனைபடியும் டிசம்பர் 4ம் தேதி மாலை மாவட்ட சட்டபணிகள் ஆணைகுழுவின் சார்பில் பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துரைமங்கலத்தில் உள்ள அன்பகம் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பள்ளியில் மாற்றுத் திறனாளிக்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமாகிய சந்திரசேகர் கலந்துகொண்டு மாற்றுத் திறனாளிக்களுக்கான சட்ட விழிப்புணர்வு குறித்து தெளிவாக எடுத்துரைத்தார். மேலும் அவர்களுடன் கலந்துரையாடல் செய்து அவர்களின் குறை, நிறைகளை கேட்டறிந்தார். வேறு ஏதேனும் குறைகள் இருப்பின் சட்ட உதவி மையத்தை நாடலாம் என்று அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் சட்ட உதவி பாதுகாப்பு வழக்கறிஞர் திருஞானம் கலந்து கொண்டு மாற்று திறனாளிகளுக்கான விழிப்புணர்வு குறித்து பேசினார். இதில் அன்பகம் சிறப்பு பள்ளியின் பொறுப்பாளர் பாலகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் உட்பட மாற்றுத்திறனாளி மாணவர்கள் 40 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
