பேராவூரணி : திவிக கொள்கை விளக்க கருத்தரங்கம்

பேராவூரணி : திவிக கொள்கை விளக்க கருத்தரங்கம்
கருத்தரங்கம் 
பேராவூரணியில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கொள்கை விளக்க கருத்தரங்கம் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி திருமண மண்டபத்தில், திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பெரியார் 50 ஆம் ஆண்டு நிணைவு நாள், அம்பேத்கர் 67 ஆம் ஆண்டு நினைவு நாள், வைக்கம் போராட்ட நூற்றாண்டு, 'எது திராவிடம், எது சாதனம்' கொள்கை விளக்க கருத்தரங்கம் மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம் தலைமையில் நடைபெற்றது.

ஒன்றியச் செயலாளர் மருத. உதயகுமார் வரவேற்றார் மாவட்டச் செயலாளர் பாரி, சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருத்தரங்கில்,' பெரியார், அம்பேத்கர், வைக்கம் போராட்டம்' என்ற தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழக பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன், 'திராவிடம், சனாதனம்' என்ற தலைப்பில் சாக்கோட்டை இளங்கோவன், 'பெரியாரும் திருக்குறளும்' என்ற தலைப்பில் தமிழ் வழிக் கல்வி இயக்க தலைவர் சின்னப்ப தமிழர் ஆகியோர் பேசினார்கள். நிகழ்ச்சியில் பேராசியர் சண்முகப்பிரியா, மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், மதிமுக ஒன்றியச் செயலாளர் பாலசுப்பிரமணியன், சேதுபாவாசத்திரம் வட்டார காங்கிரஸ் தலைவர் சேக் இப்ராகிம்ஷா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் ஒன்றியச் செயலாளர் பன்னீர்செல்வம், திராவிடர் விடுதலைக் கழக நகர அமைப்பாளர் தா.கலைச்செல்வன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். நிறைவாக, ஒன்றியத் தலைவர் கோவிந்தன் நன்றி கூறினார்.

Tags

Next Story