பேராவூரணி வருவாய்த்துறையினர் காத்திருப்பு போராட்டம்

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறையினர் காத்திருப்பு போராட்டம். 
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம், தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டக்கிளை சார்பில், துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணி இறக்க பாதுகாப்பு அரசாணையினை உடன் வெளியிட வேண்டும். இளநிலை வருவாய் ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையின் அடிப்படையில் விதி திருத்த ஆணையினை உடன் வழங்க வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்களின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு, அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அனைத்து வட்டங்களிலும், சான்றிதழ் வழங்கும் பணிக்கான புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து பணிகளையும் புறக்கணித்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு, வருவாய் துறை அலுவலர் சங்க வட்ட கிளைத்தலைவர் ஜெயதுரை தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியர் தெய்வானை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அசரப், சுப்ரமணியன், வட்ட செயலாளர் ரெத்தினவேல், துணைத்தலைவர் கமலநாதன், வட்ட பொருளாளர் சுமித்ரா ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். நிறைவாக சங்க நிர்வாகி முருகேசன் நன்றி கூறினார். இதில், 6 பெண்கள் உள்ளிட்ட 20 பேர் பங்கேற்றனர். வருவாய்த்துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் காரணமாக வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டது. பல்வேறு பணிகளுக்காக வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Tags

Next Story