வாசனை திரவியங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அமைக்கணும்...!

வாசனை திரவியங்கள் தயாரிக்கும்  தொழிற்சாலைகள்  அமைக்கணும்...!

மாம்பழ கூழ், தேங்காய் எண்ணெய் மற்றும் பூக்களில் இருந்து வாசனை திரவியங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாம்பழ கூழ், தேங்காய் எண்ணெய் மற்றும் பூக்களில் இருந்து வாசனை திரவியங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேளாண் வணிகத்துறையின் மூலம் மாம்பழ கூழ், தேங்காய் எண்ணெய் மற்றும் பூக்களில் இருந்து வாசனை திரவியங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும் வேலூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை: வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன், தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் டிசம்பர் மாத விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் டிசம்பர் 2023 ஆம் மாத விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் உரிய துறை அலுவலர்கள் பங்கேற்புடன் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதலாவதாக வேளாண்மை துறையின் மூலம் சம்பா பயிருக்கு பயிர் காப்பீடு செய்திட ஜனவரி 15ம் தேதி வரையில் கால கெடு உள்ள நிலையில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன் பெற ஆலோசனை வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து விவசாயிகளின் பிரதான கோரிக்கைகளான வேளாண்மைத் துறையின் மூலம் இயற்கை உரங்கள் வழங்குதல், போகி பட்டத்திற்கு தேவையான உரங்கள் விதைகள் வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைத்திட வேண்டும். தோட்டக்கலைத் துறையின் மூலம் மாஞ்செடிகளுக்கு பூச்சி நோய் தாக்குதல்களை தடுக்க உரிய தரமான மருந்துகளை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வேளாண் வணிகத்துறையின் மூலம் மாம்பழ கூழ், தேங்காய் எண்ணெய் மற்றும் பூக்களில் இருந்து வாசனை திரவியங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அமைத்தல், காட்பாடி உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வேளாண் பொறியியல் துறையின் மூலம் நெல் நடவு செய்யும் இயந்திரம் மற்றும் நெல் நடவு முறைகள் குறித்த பயிற்சிகள் விவசாயிகளுக்கு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். என பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டது. இதனை அரசு அதிகாரிகள் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்கள். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, , இணை இயக்குநர் வேளாண்மை சோமு, உதவி வன பாதுகாவலர் மணிவண்ணன், உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story