வீணாகும் காய்கறிகளை என்ன பண்ணலாம் தெரியுமா..?

வீணாகும் காய்கறிகளை என்ன பண்ணலாம் தெரியுமா..?

காய்கறிகளில் மதிப்பு கூட்டு பொருள் தயாரிப்பு குறித்து பயிற்சி

காய்கறிகளில் மதிப்பு கூட்டு பொருள் தயாரிப்பு குறித்து பெண்களுக்கு பயிற்சி.

தேனியில் நடைபெற்ற காய்கறிகளில் மதிப்பு கூட்டு பொருள் தயாரிப்பு குறித்த பயிற்சியில் கிராமப்புற பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அரசு தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கிராமப்புற பெண்கள் மேம்பாட்டிற்காக மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு குறித்து விளக்கம் மற்றும் பயிற்சி பாசறை நடைபெற்றது. இந்த பயிற்சி பாசறையில் உசிலம்பட்டி பகுதியில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

பயிற்சி பாசறையில் பங்கேற்ற பெண்களுக்கு எந்தெந்த காய்கறிகளை மதிப்பு கூட்டு பொருளாக மாற்ற முடியும், அவற்றை எப்படி சந்தை படுத்த முடியும், அதற்கான தொழில் நுட்பம் என்ன என்பது குறித்து பழவியல் துறை ராஜதுரை, காய்கறி துறை பேராசிரியர் பியூலா மற்றும் தொழில்நுட்ப பேராசிரியர்கள் விளக்கம் அளித்தனர்.

மேலும் பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி ஆராய்ச்சி நிலைய முதல்வர் ராஜாங்கம் பெண்கள் பொருளாதார ரீதியாக முன்னேறுவதற்கான அடிப்படை பயிற்சிகளை பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் வழங்கி வருவது குறித்து தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பங்கேற்ற கிராமப்புற பெண்களுக்கு தக்காளி, கொத்தவரங்காய், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகளில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள் தயாரிப்பது குறித்து விளக்கத்துடன் செய்முறை பயிற்சி செய்து காண்பித்தனர்.

இந்த பயிற்சியில் பங்கேற்ற கிராமப்புற பெண்கள் கூறுகையில் கிராமப்புற பெண்களுக்கு முழுமையான வேலை கிடைக்காததால் 100 நாள் பணிக்கு செல்வதாகவும், தற்போது இதுபோன்று காய்கறிகளில் மதிப்பு கூட்டு பொருள் தயாரிக்கும் முறையை கற்றுக் கொண்டால், பெண்கள் குழுக்களாக இணைந்து காய்கறிகளைக் கொண்டு மதிப்பு கூட்டுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்வதன் மூலம் தங்களும் பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய முடியும் என்பதற்காக இந்த பயிற்சியை 50க்கும் மேற்பட்ட குழுக்களைச் சேர்ந்த பெண்கள் பங்கேற்று பயிற்சி பெற்று வருவதாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Tags

Next Story