பெரியநாயகி அம்மன் கோயில் தேரோட்டம்!
தேரோட்டம்
நெடுங்குடி பெரிய நாயகி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.
திருமயம்: அரிமளம் அருகே நெடுங்குடி பெரிய நாயகி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 29ம் தேதி காப்புக்கட்டுதல் வைபவத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு வீதியுலா நடந்து வந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. கைலாசநாதர் கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்ட உற்சவர் பெரியநாயகி அம்மன் சிலை அலங் கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளியதும் நூற்றுக்கணக்கானோர் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர் கோயிலை சுற்றி 4 வீதிகளிலும் வலம் வந்து மாலை 6.30 மணிக்கு நிலையை அடைந்தது. நெடுங்குடி மற்றும் சுற்றுவட் டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story