விரைவில் சென்னைக்கு நிரந்தர தீர்வு - அமைச்சர் பொன்முடி

விரைவில் சென்னைக்கு நிரந்தர தீர்வு - அமைச்சர் பொன்முடி
மிக விரைவில் சென்னைக்கு நிரந்தர தீர்வு; விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி பேட்டி
விரைவில் சென்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரம் சண்முகபுர காலனி பகுதியில் உள்ள அவர் இல்லத்தில் செய்தியாளர் சந்தித்து பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில் அரசியலுக்காக எடப்பாடி பழனிச்சாமி பேசுவதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் 2015 ல் அதிமுக ஆட்சியில் என்ன நடந்தது என மக்கள் நன்று புரிந்து கொண்டுள்ளனர். குறிப்பாக சென்னை மக்களுக்கு நன்றாக தெரியும் இன்று இந்த தமிழக முதலமைச்சர் பொறுப்பு ஏற்ற முதல் மழை வரும் என அறிவித்ததற்கு பிறகு அவர் எடுத்திருக்கிற நடவடிக்கை எல்லாம் தமிழக முதலமைச்சரே களத்தில் சென்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை துரிதப்படுத்தி உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இந்த நான்கு ஐந்து நாட்களாக இதுவரை இல்லாத வெள்ளம் சென்னையில் சூழ்ந்தது. கிட்டத்தட்ட 47 ஆண்டுகளாக இல்லாத மிகப்பெரிய வெல்லம் தாக்கியதும் அதன் பாதிப்பு அதிக அளவு இல்லாமல் நடவடிக்கை எடுக்க ப்பட்டுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். அதில் கடந்த மழை வெள்ளத்தில் எத்தனை பேர் உயிர் நினைத்தார்கள் என்று அவருக்கு தெரியும். பத்து சதவீதம் கூட தற்பொழுது சென்னை மழை வெள்ளத்தில் இல்லை அதற் உரிய நடவடிக்கை மேற்கொண்டவர் தளபதி மு க ஸ்டாலின் என்றார்.

தமிழக முதலமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கை எல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அது அவர்களுக்கு நன்றாக தெரியும் அதுவும் சென்னை மக்களுக்கு தெரியும் என்றார். இல்லாமல் பிஜேபி கட்சியினரும் பாராட்டி வருகின்றன. டிடிவி தினகரனும் பாராட்டி வருகின்றனர். அவர்களெல்லாம் ஒரு வெளிப்படையான பாராட்டக்கூடிய எண்ணம் இருந்ததால் பாராட்டி வருகின்றனர். ஆனால் மற்றவர்கள் எல்லாம் எல்லாத்தையும் அரசியல் லாபம் பார்ப்பதற்காக அரசியலுக்காக மட்டுமே செய்து வருகின்றன. அதிலும் எடப்பாடி பழனிச்சாமி எதுவானாலும் சொல்லிக் கொண்டு போவார். அந்த காலத்தில் அவர் பொதுப்பணித்துறை பொறுப்பில் இருந்த பொழுது அந்த ஆட்சியில் என்னென்ன நடந்தது என புரட்டிப் பார்த்தாலே போதும்.

ஆனால் அவருக்கு இதே வேலையா போச்சு. அரசாங்கத்தை குறை சொல்ல வேண்டும் என்பதற்காகவே குறை சொல்லி வருகிறா.ர் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பது அவர் எண்ணம் கிடையாது. ஏதோ ஒரு இடத்தில் போய் நின்று கொண்டு வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு நான் எல்லாம் பண்ணினேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் உண்மையில் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் நியமித்து அந்தந்த பகுதிகளுக்கு நேரடியாக களத்தில் சென்று அந்தப் பணிகள் எல்லாம் முடித்து விட்டவர் என்றார். அது தமிழக முதலமைச்சர் என்றார். இது எல்லாம் இரண்டு நாட்கள் பெய்த மழையை எவ்வளவு சீக்கிரம் அப்புறப்படுத்த முடியுமோ நடவடிக்கை எடுத்தார் என்பது சென்னை மக்களுக்கு குறிப்பாக தெரியும்.

மேலும் ஒன்றிய அரசிடம் நிரந்தரமான நடவடிக்கை மேற்கொள்ள நிதி கூறப்பட்டுள்ளது நிரந்தரமாக சென்னை மக்கள் நல்ல மழை பெய்தால் தண்ணீர் வெல்லம் நிக்காத அளவுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க தமிழக முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

Tags

Next Story