பவானிசாகர் அணையில் வண்டல் மண் எடுக்க அனுமதி - விவசாயிகள் கோரிக்கை

பவானிசாகர் அணையில் வண்டல் மண் எடுக்க அனுமதி - விவசாயிகள் கோரிக்கை

மனு அளிக்க வந்த விவசாயிகள் 

பவானிசாகர் அணையில் வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.

தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருந்து வருவதால் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெறுவதற்காக புகார் பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. இந்த பெட்டியில் நேற்றுமுன்தினம் பொதுமக்கள் தங்களது மனுக்களை போட்டனர்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க வடக்கு மாவட்டசெயலாளர் நடராஜன் தலைமையில் விவசாயிகள் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 70 அடிக்கும் குறைவாக உள்ளபோது, ஈரோடு மாவட்ட விவசாயிகள் வண்டல் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப் படும். கடந்த 2016-ம் ஆண்டு கடைசியாக அனுமதி வழங்கப் பட்டது. கடந்த 4 மாதங்களாக பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லை. அணையின் நீர்மட்டம் 44 அடியாக உள்ளது.

கடந்த மாதமே அனுமதி கேட்டு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறையை காரணமாக கூறி அனுமதி மறுக்கப்பட்டது. இந்தநிலையில் கோடை மழை பெய்வதால் அணைக்கு நீர்வரத்து ஏற்படும் நிலை உள்ளது மழை பெய்தால் சாகுபடி பணியை விவசாயிகள் தொடங்குவார்கள். எனவே பவானி சாகர் அணையில் வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்க வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story