சேலத்தில் கிராவல் மண் எடுக்க அனுமதி !

சேலத்தில் கிராவல் மண் எடுக்க அனுமதி !

சேலம்

கிராவல் மண் எடுக்க உடனே பர்மிட் வழங்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் கிழக்கு மாவட்ட மணல் மற்றும் எம்.சாண்ட் லாரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் கார்த்தி தலைமையில் நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில், சேலம் மாவட்டத்தில் இயங்கி வரும் கிராவல் மற்றும் செம்மண் குவாரிகளில் வழங்கப்படும் பர்மிட் கடந்த 4 மாதங்களாக வழங்கப்படவில்லை. இதனால் லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள் மற்றும் அவர்களை சார்ந்த குடும்பங்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.

கிராவல் மற்றும் செம்மண்ணுக்கு வழங்கப்படும் பர்மிட் விலை ரூ.500 ஆகும். ஆனால் தற்போது யூனிட்டுக்கு ரூ.500 முதல் ரூ.2 ஆயிரம் வரை ராயல்டி கொடுத்தால் தான் பர்மிட் வழங்குவோம் என்று தெரிவிக்கின்றனர். எனவே, கிராவல் மற்றும் செம்மண் குவாரிகளில் பர்மிட் வழங்க கூடுதல் கட்டணம் வசூலிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், கிராவல் மண் எடுக்க உடனே பர்மிட் வழங்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story