மரத்தை வெட்டிய நபருக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம்!

மரத்தை வெட்டிய நபருக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம்!

அணைக்கட்டு அருகே கும்பாபிஷேகம் நிகழ்ச்சிக்காக மரக்கிளையை வெட்டிய நபருக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அணைக்கட்டு அருகே கும்பாபிஷேகம் நிகழ்ச்சிக்காக மரக்கிளையை வெட்டிய நபருக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடுகத்தூர் அடுத்த பின்னத்துரை, சின்ன புதூர் கிராமத்தை சேர்ந்த பகுதியில் வனவர் துளசி ராமன், பழனி ஆகியோர் தலைமையிலான வனக்காப்பாளர்கள் தீ தடுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, காட்டுக்கு பகுதியில் இருந்து கோயில் கும்பாபிஷேகத்திற்கு என சுமார் 5 கிலோ எடைகொண்ட 3 அடி நீளமுடைய மரக்கிளையினை ஒருவர் வெட்டி எடுத்து வருவதை பார்த்துள்ளனர். அப்போது, அதிகாரிகள் அவரிடம் விசாரித்ததில் அவர் பின்னத்துரை கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (37), என்பதும் தெரியவந்தது. மேலும் இது குறித்து, வழக்குப்பதிந்த வனத்துறையினர் சட்டவிரோதமாக மரக்கிளையை வெட்டிய குற்றத்திற்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து வசூல் செய்தனர்.

Tags

Next Story