கால் இடறி கீழே விழுந்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கால் இடறி கீழே விழுந்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சின்னதாராபுரம், காசிபாளையத்தில் கால் இடறி கீழே விழுந்த நபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 


சின்னதாராபுரம், காசிபாளையத்தில் கால் இடறி கீழே விழுந்த நபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம், காசிபாளையம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் வயது 59. இவர் கடந்த 2- வருடங்களாகவே மனநலம் பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இதனிடையே ஏப்ரல் 7-ம் தேதி நள்ளிரவு 12:30 மணி அளவில் வீட்டிலிருந்து நடந்து சென்றவர், கால் இடறி கீழே விழுந்ததில் காயம் அடைந்தார்.

உடனடியாக அவரை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த அவர் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 11ஆம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த ராஜேந்திரன் மகள் நர்மதா வயது 27 என்பவர், இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில்,சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த ராஜேந்திரன் உடலை உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சின்ன தாராபுரம் காவல் துறையினர்.

Tags

Next Story