அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் மரணம்

அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் மரணம்
பலி
திருச்செந்தூர் அருகே மனைவியை பிரிந்த மன வேதனையில் அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே மனைவியை பிரிந்த மன வேதனையில் அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி காமராஜர் நகர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் தங்கவேல் மகன் கணேசன் (54). குடும்ப பிரச்சனை காரணமாக அவரது மனைவி 7 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்று விட்டாராம்.

இதனால் அவர் மது போதைக்கு அடிமையாகி விட்டாராம். இந்நிலையில் நேற்று அவர் அடைக்கலாபுரத்தில் உள்ள டாஸ்மாக் பாரில் அளவுக்கு அதிகமாக மது குடித்து மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரை நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலூகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story