ராமர் கோவில் கும்பாபிஷேகம் விழாவிற்கு சென்றவர் பலி

ராமர் கோவில் கும்பாபிஷேகம் விழாவிற்கு சென்றவர் பலி

அமைச்சர் அஞ்சலி

அயோத்தி கும்பாபிஷேகத்திற்கு சென்று திரும்பிய போது நெஞ்சுவலியால் மரணமடைந்த துணிவியாபாரியின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் காமராஜர் தெருவை சேர்ந்தவர் நாகராஜ் .துணி வியாபாரம் செய்து வருகிறார். இவர் அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்காக அயோத்தி சென்று கும்பாபிஷேகத்தை பார்த்துவிட்டு வீடு திரும்பும் பொழுது டெல்லி சவுக்கி ஹரி நகரில் கடும் குளிர் காரணமாக நெஞ்சுவலி ஏற்பட்டது. அங்குள்ளவர்கள் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார் .கடந்த 23-ம் தேதி அவர் சட்டப்பையில் வைத்திருந்த ஐடி புரூப்பை வைத்து அவர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் என தெரியவந்தது .

இந்த நிலையில் அந்த பூத உடலை அங்கிருந்து பாதுகாப்பான நிலையில் அரசு செலவில் விமானத்தில் ஏற்றி விழுப்புரம் மாவட்டம், திருவண்ணெய்நல்லூர் காமராஜர் தெருவில் உள்ள 42 நம்பர் அவருடைய இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டது. அவருடைய தாயார் சாந்தி என்கிற ஈரோடு அம்மா மற்றும் இரண்டு மகன்கள் அந்த பூத உடலை பெற்றுக் கொண்டனர். ஒப்படைப்பதற்காக திருவெண்ணெய்நல்லூர் வந்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் இறந்த நாகராஜ் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சகம் கணேசன், நகர செயலாளர் பூக்கடை கணேசன் மாலையை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மற்றும் வார்டு கவுன்சிலர்கள் பொதுமக்கள் இறந்த நாகராஜ் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

Tags

Next Story