பெருங்களத்துாரில் பூங்கா குளம் துார்வார வேண்டுகோள்

பெருங்களத்துாரில் பூங்கா குளம் துார்வார வேண்டுகோள்
பூங்கா குளம் துார்வார வேண்டுகோள்
தாம்பரம் மாநகராட்சி, பெருங்களத்துாரில் உள்ள ஏ. பி. ஜே. , அப்துல் கலாம் பூங்காவை பராமரிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் மாநகராட்சி, 4வது மண்டலம், பெருங்களத்துாரில், ஏ. பி. ஜே. , அப்துல் கலாம் பூங்கா உள்ளது. சுற்றுச்சுவர், விளையாட்டு உபகரணங்கள் அமைத்து பராமரிக்கப்படும் இப்பூங்காவை, தினசரி காலை மற்றும் மாலையில், நுாற்றுக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக முதியோர், நடைபயிற்சி மேற்கொள்கின்றனர்.

பூங்கா நடுவில், குளம் உள்ளது. முறையாக பராமரிக்காததால், முழுதும் ஆகாய தாமரை வளர்ந்து குளம் இருப்பதே தெரியாத அளவிற்கு காணப்படுகிறது. சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்து காணப்படுகின்றன. பூங்கா நடுவில் உள்ள குளத்தில் படர்ந்துள்ள ஆகாய தாமரையை அகற்றி, சுத்தப்படுத்த வேண்டும். எரியாமல் உள்ள மின் விளக்குகளையும் சரிசெய்ய வேண்டும் என, நடை பயிற்சி செல்லும் மக்கள், மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story