பெருஞ்சாணி அணையில் 150 கன அடி தண்ணீர் வெளியேற்றம் 

பெருஞ்சாணி அணையில் 150 கன அடி தண்ணீர் வெளியேற்றம் 

தண்ணீர் வெளியேற்றம்

குமரியில் மழை பெய்து வருவதால் பெருஞ்சாணி அணையில் 150 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குழு மையான சீசன் நிலவி வருகிறது. இன்று காலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. சில இடங்களில் சாரல் மழை பெய்தது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரம்மியமான சூழல் நிலவி வருகிறது.

திற்பரப்பு அருவி பகுதியில் சாரல் மழை கொட்டி தீர்த்து வருவதால் அங்கு சுற்றுலா பயணிகள் ஏராளமான ஒரு குவிந்து வருகிறார்கள். குமரி மாவட்ட மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் மழை நீடிப்பதால், அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்து உள்ளது. பெருஞ்சானி அணை நீர்மட்டம் 71 அடியை எட்டியதை அடுத்து அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் பாசனத்திற்காக வெளியேற்றப்பட்டு வருகிறது. பேச்சிப்பாறை அணநீர் 44. 30 அடியாக உள்ளது. அணைக்கு 837 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது அணையில் இருந்து 637 அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Tags

Next Story