திருப்பனங்காடு கிராமத்தில் மனுநீதி நாள் திட்ட முகாம்

திருப்பனங்காடு கிராமத்தில் மனுநீதி நாள்  திட்ட முகாம்

மனுநீதி நாள் திட்ட முகாம்


திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டாரத்தில் வெம்பாக்கம் ,சேலேரி ,திருப்பனங்காடு ,பில்லாந்தங்கள் ஆகிய வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய மனுநீதி‌ நாள் திட்ட விழா திருப்பனங்காடு கிராமத்தில் 25.10.23 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையிலும் செய்யாறு சாட் ஆட்சியர் முன்னிலையிலும் நடைபெற்றது.

இதில் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஓ. ஜோதி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமதி பார்வதி சீனிவாசன் வெம்பாக்கம் ஒன்றிய பெருந்தலைவர் D.ராஜு மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவ்விழாவில் வேளாண்துறையின் சார்பாக வெம்பாக்கம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ம.சண்முகம் கலந்து கொண்டு வேளாண்துறையில் செயல்படுத்தக்கூடிய கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் பல்வேறு மானியத் திட்ட விவரங்களை எடுத்துரைத்தார்.

இம் மனுநீதி நாள் திட்ட விழாவில் வெம்பாக்கம் வட்டார வேளாண்மை துறை சார்பாக கண்காட்சி அரங்கம் அமைத்து வெம்பாக்கம் வட்டாரத்தைச் சேர்ந்த 22 விவசாய பயனாளிகளுக்கு ரூபாய் 309844/-மதிப்பிலான மானியத்திற்குள்ளான இடுபொருட்களான‌ மழைத்துவான் ,விசைத்தெளிப்பான், நுண்ணூட்ட உரங்கள் ,உயிர் உரங்கள் ஆகியவை மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர் ,செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ,மாவட்ட ஊராட்சி குழு தலைவர், வெம்பாக்கம் ஒன்றிய பெருந்தலைவர் ஆகியோரால் வழங்கப்பட்டது.

Tags

Next Story