கோரிக்கை மனு

கோரிக்கை மனு

மல்லசமுத்திரத்தில் உள்ள, பழமை வாய்ந்த கோவிலில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மண்டப அறக்கட்டளை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு அளித்தனர்.


மல்லசமுத்திரத்தில் உள்ள, பழமை வாய்ந்த கோவிலில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மண்டப அறக்கட்டளை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு அளித்தனர்.

இதுகுறித்து, அம்மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; மல்லசமுத்திரத்தில் சோழர்கள் காலத்தில் கட்டடப்பட்ட சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழீஸ்வரர், அழகுராயபெருமாள், செல்லாண்டியம்மன் கோவில்கள் அமைந்துள்ளது. இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆண்டுதோறும் ஆனிமூல நட்சத்திரத்தன்று திருவிழா நடப்பது வழக்கம். 1974ல் தாழ்த்தப்பட்ட பட்டியல் சமுதாயத்தை சேர்ந்த மக்களும் அறங்காவலர்களாக இருந்துள்ளனர். தற்சமயம், எங்களுக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய மண்டப அறக்கட்டளையை சிலர் தடுக்கின்றனர். இது சட்டப்படி குற்றமாகும். இந்திய அரசியலமைப்பு சட்டப்படியும், இந்து அறநிலையத்துறையின் சட்டவதிகளின் படியும் எங்களுக்கு தார்மீகமாக கிடைக்க வேண்டிய மண்டப அறக்கட்டளை உரிமையகளையும், காணியாச்சி உரிமைகளையும், திருவிழாவின்போது எங்கள் பகுதிக்கு சுவாமி திருவீதிஉலா செய்யவும் தாங்கள் உத்தரவு அளிக்க வேண்டும்.

மேலும் இக்கோவில்களில் செயல் அலுவலர் இல்லாத காரணத்தினால், எங்கள் குலதெய்வமான செல்லாண்டியம்மன் கோவிலுக்குள் நுழைந்தால், சிலர் மிரட்டும் தோணியில் இங்கே எதற்கு வந்தாய் என கேள்ளி கேட்கின்றனர். திருவிழா சம்மந்தமாக நடைபெறும் அமைதி பேச்சுவார்த்தையில் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களை அழைத்து எங்களின் குறைகளையும் கேட்க வேண்டும். நிரந்தர செயல்அலுவலர் நியமனம் செய்ய வேண்டும். சத்தாபரண நிகழ்வில் எங்கள் சமுதாய மக்கள் சார்பாக செய்யக்கூடிய வாணவேடிக்கை நிழ்வை அச்சிட வேண்டும். மண்டப கட்டளை செய்யக்கூடிய நாள் மற்றும் நேரம் ஒதுக்கப்பட வேண்டும். சென்ற வருட திருவிழா வரவு, செலவு கணக்கு ஆர்.டி.ஓ., தலைமையில் பொதுமக்கள் முன்னிலையில் படிக்க வேண்டும். உண்டியல் மற்றும் நன்கொடை வசூல் செய்யக்கூடிய அதிகாரிகள் திருக்கோவில் உள்ளேயே ரசீது போட வேண்டும். திருவிழா காலங்கள் மற்றும் இதர நாட்களில் திருக்கோவில் உள்ளே அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தவிர மற்ற நபர்களை தங்க அனுமதிக்க கூடாது. உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை மக்கள் அளித்தனர். அதுமட்டுமல்லாது, தமிழக முதல்வர், இந்துஅறநிலையத்துறை அமைச்சர், தலைமை செயலர், கலெக்டர் மற்றும் பல்வேறு அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுவாக அனுப்பியுள்ளனர்.

Tags

Next Story