சாத்தூரில் சாலை நடைபாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு

சாத்தூரில் சாலை நடைபாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு
மனு அளித்தவர்கள்
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் சாலை நடைபாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட மதுரை- கன்னியாகுமரி சாலையில் மின்சார அலுவலகம் முதல் முக்குராந்தல் வரை சுமார் 1 அரை கிலோ மீட்டர் தூரத்தில் சாலையில் இருபுறமும் ஆட்டோ , வேன் ஸ்டான்டு

பூக்கடை கள் , நகராட்சி பெட்டிகள் , நெடுஞ்சாலை கடைகள் , ஆவின் கடைகள் உள்ளது.மேலும் இந்த கடைகளை நம்பி 500 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். அனைத்தையும் அகற்றி விட்டு நடைபாதை அமைக்க நெடுஞ்சாலை துறையினர் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. நெடுஞ்சாலை துறை மூலம் நடைபாதை அமைக்க பட்டால் சாலையோர கடைகள் மூலம் பயன்பெறும் 500 குடும்பங்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்படும் நிலை உள்ளது.

எனவே சாலை போக்குவரத்து தொழிலாளர் கள் சங்கம் சார்பில் சாத்தூரில் உள்ள நெடுஞ்சாலை துறையின் கோட்ட பொறியாளரிடம் சாலை விரிவாக்க திட்டத்தினால் பாதிக்கப்படும் குடும்பத்தினரின் வாழ்வாதாரத்திற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் , சாத்தூரில் சாலை விரிவாக்க திட்டத்தினை கைவிட வேண்டும் என கோரி மனு அளித்தனர்.

Tags

Next Story