டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மனு
மனு அளிக்க வந்த மக்கள்
சத்திரம் புதுக்குளம் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து குறைதீர் முகாமில் அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்களை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மனு அளித்தனர். அந்த வகையில் திருநெல்வேலி வடக்கு புறவழிச்சாலையில் உள்ள சத்திரம் புதுக்குளம் பகுதியில் மதுபான கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
Next Story