சிப்காட் எதிர்ப்பு குழுவினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு!
மனு
வளையப்பட்டி பகுதியில் உள்ள சிப்காட் எதிர்ப்புக்குழு நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணனிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது, நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டம் வளையப்பட்டி, N. புதுப்பட்டி, பரளி, அரூர் ஆகிய சுற்றுப்பகுதிகளில் சிப்காட் அமைப்பதற்காக வருவாய்த்துறையினர் நிலம் எடுப்பதற்காக ஆய்வுப் பணியை மேற்கொண்டனர்.
அதன் பின்னர் பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு நாமக்கல் மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளை அழைத்து வருவாய்த்துறையினர் தயார் செய்யப்பட்ட வரைபடத்தையும் அப்பகுதியில் உள்ள விவசாயிகளினுடைய நிலத்தினுடைய உண்மை தன்மையை விவசாயிகள் காண்பித்தனர், அப்போது அங்கே இருக்கின்ற உண்மை தன்மை அனைத்தையும் மறைக்கப்பட்டு இருந்தது.
இது சம்பந்தமாக அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் நீர்நிலைகள் மறைக்கப்பட்டு இருப்பதாகவும் முப்போகம் விளையக்கூடிய விவசாய நிலங்களை தரிசு என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள் மேலும் அப்பகுதியில் மேய்ச்சல் புறம்போக்கு நிலங்கள் வனவிலங்குகளான மான்கள் மறைக்கப்பட்டு இருப்பதையும் அருகாமையில் இருக்கின்ற வீடுகள் ஆறு, ஏரி, குளம், குட்டைகள், நீரோடைகள், கரை போட்டான் ஆறு ஆகியவை மறைக்கப்பட்டு இருப்பதை விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துரைத்தனர்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர், விவசாயிகளும் ஓரிரு நாட்களை இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அங்கு அனுப்பி உண்மை தன்மையை விவசாயிகளிடம் இணைந்து ஆய்வு செய்து அரசுக்கு உண்மையான அறிக்கையை அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால் ஒரு வருடமாகியும் அதிகாரிகள் இன்று வரை ஆய்வு செய்யாமல் பழைய அறிக்கையை பழைய வரைபடங்களை அரசுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிய வருகிறது.
இதனால் சிப்காட் நிறுவனம் இப்பகுதியில் சிப்காட்டிற்காக நிலம் எடுப்பதற்காக நிர்வாக அனுமதி வழங்குவதற்காக அனைத்து பணிகளையும் செய்து வருவதாக தெரிகிறது. எனவே இப்போது உண்மை தன்மையை மறைத்து அரசுக்கு அரிக்க அனுப்பிய சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகள் மீதும் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும் ஆவணம் செய்யுமாறு மேலும் அரசுக்கு இறுதியாக அனுப்பி வைத்து அறிக்கைகளையும் விவசாயிகளிடம் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க ஆவணம் செய்யுமாறும் இப்பகுதியில் சிப்காட் அமைப்பதற்கு ஏற்ற பகுதியாக இல்லாத போதும்.
வருவாய்த்துறையினர் உண்மை தன்மையை மறைத்து அரசுக்கு அருகே அனுப்பி உள்ளதாக தெரிய வருகிறது எனவே இது குறித்து காவல்துறையினர் மூலம் விசாரணை செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைத்திடவும் இப்பகுதியில் சிப்காட் அமைப்பதை ரத்து செய்ய வேண்டுமென அரசுக்கு பரிந்துரை செய்து செய்து தருமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்வில் தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியம், சிப்காட் எதிர்ப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் ராம்குமார், கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளர் ரவீந்திரன், சிப்காட் எதிர்ப்பு இயக்க நிர்வாகிகள் பழனிவேல், சரவணன், ராமசாமி, தண்டபாணி, ரவி உள்ளிட்ட திரளான ஆண்களும், பெண்களும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.