கிணறு வெட்ட தடை விதிக்க கோரி மனு!

வெள்ளகோவில் கிணறு வெட்ட தடை விதிக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய பெருங்குழு தலைவர் தலைமையில் மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் வட்டாரத்துக்கு உட்பட்ட புதுப்பை ஊராட்சியில் கிணறு தோண்ட அளவு குறியீடு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிணறு வெட்ட தடை விதிக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய பெருங்குழு தலைவர் தலைமையில் நகர்மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை மனு அளித்தனர். திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் நகராட்சியில் சுமார் ஒரு லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நகராட்சி மக்களுக்கு புதுப்பை அமராவதி ஆற்றில் அருகே கிணறு தோண்டப்பட்டு அதன் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 1980 ஆம் ஆண்டு முதல் 40 வருடங்களாக வெள்ளகோவில் நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளுக்கு அந்த கிணறு மூலமாகவே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஏற்கனவே உள்ள கிணறு அருகே மூலனூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்ய ஏற்கனவே உள்ள கிணற்றுக்கு மேற்புறமாக மிக அருகில் இரண்டு கிணறுகள் தோன்றுவதற்கான அளவுக்குறியீடு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவ்வாறு கிணறுகள் தோண்டப்படும் பட்சத்தில் வெள்ளகோவில் நகராட்சிக்கு கிடைக்க கூடிய தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் எனவும் மேலும் புதிதாக தோண்டப்படும் கிணறுகள் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் பஞ்சாயத்து நிர்வாகத்திற்கும் எந்த ஒரு தகவலும் வழங்கப்படாத நிலையில் பணிகள் நடைபெற்று வருவதாகவும் , அம்ருத் திட்டத்தின் கீழ் கிணறுகள் தோண்டப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்ற நிலையில் இதுகுறித்து உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு எந்த ஒரு தகவலும் இல்லை எனவும் அதேபோல் ஒரு கிணறு என தெரிவிக்கும் நிலையில் இரண்டு கிணறுகள் தோன்டப்படுவதற்கான அளவுக்குறியீடுகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் எனவே இத்திட்டத்தில் சந்தேகம் இருப்பதோடு வெள்ளகோவில் நகராட்சிக்கு கிடைக்கும் தண்ணீருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய பெருங்குழு தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்

Tags

Read MoreRead Less
Next Story