வங்கி ஊழியரின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கணும் !

வங்கி ஊழியரின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கணும் !

பைல் படம் 

திருவெண்ணெய்நல்லூர் அருகே வங்கி ஊழியரின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 27). தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்தார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 26வயது பெண்ணை காதலித்தாக கூறப்படுகிறது. அந்த பெண்ணை அவர் திருமணம் செய்ய மறுத்ததாக கூறி, அப்பெண்ணின் உறவினர்கள் விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீ சார் வழக்குப்பதிவு செய்து, கடந்த மார்ச் 30-ந் தேதி ராதா கிருஷ்ணனை அழைத்து விசாரணை நடத்தினர்.

அதன் பின்னர். போலீஸ் நிலையத்துக்கு அருகே உள்ள கோவிலில் வைத்து அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து, அந்த பெண்ணை அவரது வீட்டில் விட்டு விட்டு, தனது வீட்டுக்கு இரவில் வந்த ராதாகிருஷ்ணன், அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவர் தற்கெலை செய்துகொள்வதற்கு முன்பு, தனது மரணத்திற்கு அப்பெண்ணின் உறவினர்கள் 5 பேர் தான் காரணம் என்று கடிதம் எழுதி வாட்ஸ் அப் குரூப்பில் பகிர்ந்து சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக திருவெண் ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் ராதாகிருஷ்ணனின் தந்தை பாவாடை தனது குடும்பத்தினருடன் விழுப்புரத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு கலெக்டர் பழனியை சந் தித்து மனு ஒன்றை அளித்தார். அதில், என்னுடைய மகன் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் முதல் தகவல் அறிக்கையில் என் மகன் எழுதிய கடிதத்தை பதிவு செய்ய வேண்டும். தற்கொலையில் தொடர்புடைய அரசு ஊழியர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். போலீசார் அவர்களுக்கு சாதகமாக செயல்படுகிறார்கள். எனவே என் மகன் இறப்புக்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story