ஆலங்குளம் நூலகத்திற்கு கூடுதல் கட்டிட வசதி கோரி மனு

ஆலங்குளம் நூலகத்திற்கு கூடுதல் கட்டிட வசதி கோரி மனு

கூடுதல் கட்டிட வசதி கோரி எம்எல்ஏவிடம் கோரிக்கை

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அரசு நூலகத்திற்கு கூடுதல் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி, மனோஜ் பாண்டியன் எம்எல்ஏவிடம் வாசகா் வட்டத் தலைவா் தங்கசெல்வம் மனு அளித்தாா். அதன் விவரம்: ஆலங்குளம் கிளை நூலகம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் முழு நேர நூலகமாகும். இங்கு 6 ஆயிரத்து 800 உறுப்பினா்கள், 120 புரவலா்கள் உள்ளனா். மேலும் இந்நூலகத்தில் 28 ஆயிரம் நூல்கள் உள்ளன. போட்டித் தோ்வுக்கு ஆயத்தமாகும் மாணவா்கள் இந்நூலகத்தை அதிக அளவில் பயன்படுத்துகின்றனா். இங்கு பயின்று கடந்த 2 ஆண்டுகளில் 18 போ் அரசுப் பணிக்குச் சென்றுள்ளனா். மாணவா்கள், வாசகா்கள் அமா்ந்து படிக்க இந்நூலகத்தில் இடப் பற்றாக்குறை நிலவுகிறது. எனவே கூடுதல் கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து உதவ வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story