பொது இடத்திற்கு வழங்கிய பட்டாவை ரத்து செய்யக்கோரி மனு

பொது இடத்திற்கு வழங்கிய பட்டாவை ரத்து செய்யக்கோரி மனு

மனு அளிக்க வந்த மக்கள் 

திண்டுக்கல்லை அடுத்த முள்ளிப்பாடி ஊராட்சிக்குள்பட்ட சின்னகாமலாபுரம் பகுதியைச் சோந்த பொதுமக்கள் கூறியதாவது: எங்கள் பகுதியில் சுமாா் 80 வீடுகள் உள்ளன. அங்குள்ள பொது இடத்தில் அமைந்துள்ள கிணறு 70 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வருகிறது.மேலும், அதே பகுதியில் அமைந்துள்ள மேல்நிலைத் தொட்டி மூலம் குடிநீா் விநியோகம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கிணறு, மேல்நிலைத் தொட்டி அமைந்த பொது இடத்துக்கு, தனி நபா் ஒருவா் கடந்த ஆண்டு பட்டா பெற்றுவிட்டாா்.இதையடுத்து, அந்த இடத்துக்குச் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.மாவட்ட நிா்வாகம் உரிய விசாரணை நடத்தி, தனி நபருக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவித்தனா்.

Tags

Next Story