திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின் இணைப்பு வேண்டி மனு

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின் இணைப்பு வேண்டி மனு

மனு அளித்தவர்கள்

ஊத்துக்குளி தாலுகா தில்லைநகர் பகுதியை சேர்ந்த திவ்யராஜ் தனது குடும்பத்தினருடன் மின் இணைப்பு வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுக்கா தில்லைநகர் பகுதியை சேர்ந்த திவ்யராஜ் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

பிரிண்டிங் வேலைக்கு செல்லும் திவ்யராஜ் மேற்கண்ட பகுதியில் வங்கி கடன் வாங்கி சொந்த வீடு கட்டி வசித்து வரும்நிலையில் அவர் வீடு கட்டுவதற்கு முன்பாக அவருடைய இடத்தில் உயர் மின்னழுத்த தடத்தை மின் வாரியம் சார்பில் அமைத்து அப்பகுதி உள்ள தனியார் நிறுவனத்திற்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்திருக்கிறது. இதனால் தான் வீடு கட்டிக் குடியேறிய பிறகு தனக்கு வழங்க வேண்டிய சாதாரண வீட்டு மின் இணைப்பை உயர் மின்னழுத்த மின் இணைப்புகள் அருகில் இருப்பதால் தர இயலாது என மின்வாரிய ஊழியர்கள் அலைக்கழிப்பதாக குற்றம் சாட்டிய அவர் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை 10 ஆயிரத்திற்கு மேல் மின்கட்டணம் செலுத்தி வருவதாக வேதனை தெரிவித்தார்.

தற்காலிக மின் இணைப்பை கொடுக்கப்பட்டுள்ள நிலையில் தனக்கு வீட்டு மின் இணைப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் இன்று தனது குடும்பத்துடன் புகார் அளித்தார்.

குழந்தைகளின் கல்வி செலவு வீட்டு செலவு மாத வீட்டுக் கடன் 25 ஆயிரம் என பல செலவினங்களுக்கு மத்தியில் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை 10,000 12,000 13,000 என தன்னால் மின்கட்டணம் செலுத்த முடியவில்லை என வேதனையுடன் தெரிவித்தார்

Tags

Next Story