இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மனு

இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மனு
உப்பிலியபுரம் பேரூராட்சியில் அம்பேத்கா் நகா் மக்கள் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு முசிறி கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.

உப்பிலியபுரம் பேரூராட்சி, அம்பேத்கா் நகரைச் சோ்ந்த ஆதிதிராவிடா் சமூகத்தை சோ்ந்த மக்களுக்கு கடந்த 2000-ஆம் ஆண்டில் 92 வீட்டு மனைகள் அரசால் ஒதுக்கப்பட்டு தகுதி அடிப்படையில் 68 நபா்களுக்கு அப்போது வீட்டுமனைகள் வழங்கப்பட்டன. எஞ்சிய 24 வீட்டுமனைகளுக்கு தகுதியான நபா்களை தோ்ந்தெடுத்து இலவச பட்டா வழங்க வேண்டி அப்பகுதி மக்கள் 15 ஆண்டுகளாக அதிகாரிகளுக்கு மனு அளித்து வருகின்றனா்.

ஆனால், இதுவரையிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இந்நிலையில், இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி, 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் விசிக வடக்கு மாவட்ட செயலாளா் கலைச்செல்வன் தலைமையில் கோட்டாட்சியா் ராஜனிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். இந்நிகழ்வில் விசிக துறையூா் தொகுதி செயலாளா் துரை சங்கா், உப்பிலியபுரம் நகர செயலாளா் குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்று அப்பகுதி மக்களின் கோரிக்கைகள் குறித்து கோட்டாட்சியரிடம் விளக்கினா்.பொதுமக்களின் மனுவை பெற்று கொண்ட கோட்டாட்சிநடவடிக்கை எடுப்பதாக கூறினாா்.

Tags

Next Story