இலவச வீட்டுமனை பட்டா கோரி நூதன முறையில் மனு

இலவச வீட்டுமனை பட்டா கோரி  நூதன முறையில் மனு

சாட்டையடித்தபடி மனு அளிக்க வந்தவர் 

நரிக்குறவர் இன மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் ஜாதி சான்றிதழ் வழங்க கோரி காலில் சலங்கை கட்டி சாட்டை அடித்து நடனமாடி மதுரை ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுரை சக்கிமங்கலம் பகுதியில் நரி குறவர் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் 40 வருடங்கலாக 30க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும் இவர்களுக்கு வெயில் காலம் மற்றும் மழை காலங்களில் குழந்தைகளை வைத்து தங்குவதற்கு இடம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் , என்றும் 30 வருடங்களாக ஜாதி சான்றிதழ் இல்லாமல் 50க்கும் மேற்பட்ட படித்த இளைஞர்கள் அரசு வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வருவதாகவும் இதனால் ஜாதி சான்றிதழ் வழங்க கோரி நரி குறவர் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் கொட்டு மற்றும், சாட்டை அடித்து காலில் சலங்கை கட்டி ஆடி கொண்டு 10 க்கும் மேற்ப்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கிதாவிடம் மனு அளித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story