போக்குவரத்து பணிமனையை திறக்க கோரி மனு வழங்கல்

போக்குவரத்து பணிமனையை திறக்க கோரி மனு வழங்கல்

போக்குவரத்து பணிமனை

பள்ளிபாளையம் ஜீவா செட் பகுதியில் செயல்பட்டு வந்த, போக்குவரத்து பணிமனையை மீண்டும் திறக்க கோரி ,நகர மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோர் போக்குவரத்து துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு வழங்கினர் .

நாமக்கல் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக வருகை தந்த, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களிடம் பள்ளிபாளையம் நகர மன்ற தலைவர் மோ.செல்வராஜ், மற்றும் துணைத் தலைவர் ப.பாலமுருகன் ஆகியோர் கோரிக்கை மனு ஒன்று வழங்கினர்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது - நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஜீவா செட் பகுதியில் ஈ2 ஈரோடு கிளை போக்குவரத்து பணிமனை செயல்பட்டு வந்தது. இந்நிலையில் சென்னை கன்னியாகுமரி தொழில் தட திட்டத்தில், சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் பள்ளி பாளையத்தில் நடைபெற்று வரும் நிலையில்,

இதற்காக சாலை விரிவாக்கம் செய்யப்படும் பணிகள் உள்ளிட்ட காரணத்தால்,போக்குவரத்து பணிமனையில் நிறுத்தப்பட்ட 85 பேருந்துகள் அனைத்தும் வெவ்வேறு பணிமனைகளுக்கு அனுப்பப்பட்டு விட்டது. இதனால் காலையிலும் இரவிலும் பொதுமக்களை ஏற்றி இறக்குவதற்கு சிரமம் ஏற்படுகிறது.

தற்போது பாலம் வேலை 80 % சதவீதம் முடிவு பெற்றுள்ள நிலையில், மீண்டும் பள்ளிபாளையம் ஜீவா செட் பகுதியில் அமைந்துள்ள போக்குவரத்து பணிமனையை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் . ஈரோட்டில் இருந்து பள்ளிபாளையம் வழியாக செல்லக்கூடிய டவுன் பேருந்துகள் K1,K2,1 ஆகிய 15 பேருந்துகளின் BODY மற்றும் இன்ஜின் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.இதனால் பேருந்தில் பயணிக்கும் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படும்.

எனவே பழுதை சீரமைத்து புதுப்பித்து தர வேண்டும். ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பற்றாக்குறையால் ஏற்கனவே பணியில் உள்ள ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் கூடுதல் பணி மேற்கொள்ள வேண்டி உள்ளது. எனவே கூடுதலாக பேருந்து நடத்துனர்கள் மற்றும் ஓட்டுநர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மனுவைப் பெற்றுக் கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்ததாக பள்ளிபாளையம் நகர மன்ற தலைவர் மோ.செல்வராஜ் தெரிவித்தார்.

Tags

Next Story