பட்டா வழங்க வேண்டும்: ஊராட்சி மன்ற தலைவர் மனு

பட்டா வழங்க வேண்டும்: ஊராட்சி மன்ற தலைவர் மனு

மனு அளிப்பு

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் குடியிருப்பவர்களுக்கு கனிமொழி எம்பி மூலம் கொடுக்கப்பட்ட மனுக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் ஜமாபந்தியில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் கோாிக்கை மனு அளித்துள்ளார்.

தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமார் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்தில் மாவட்ட வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் உஷாவிடம் அளித்துள்ள நான்கு கோாிக்கை மனுவில் கூறியிருப்பதாவது,

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் கடந்த 2023ல் பெய்த கனமழையால் ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கின் காரணமாக ஊராட்சி பகுதியில் உள்ள குடியிருப்பு மனைகள் சேதமடைந்தன. குடியிருப்பு மனைகளுக்கு நிவாரண உதவிதொகை வழங்கும் பொருட்டு மாப்பிள்ளையூரணி கிராம நிா்வாக அலுவகம் மூலமாக மனுக்கள் பெறப்பட்டு தகுதியுடைய நபர்களின் வங்கி கணக்கில் ரூ10 ஆயிரம் வரவு வைக்கப்பட்டுள்ளது அவ்வாறு நிவாரண தொகை பெறப்பட்டவர்களின் 257 நபர்களின் பெயர் பட்டியல் மட்டுமே வீடு வழங்கும் வகைக்காக வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து இவ்வலுவலகத்திற்கு வழங்கப்பட்டது.

அப்பட்டியல் ஆய்வு செய்யப்பட்டு தகுதியானவர்களுக்கு வீடு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், நிவாரண தொகையான ரூ 10 ஆயிரம் பெற்றிருப்பவர்களின் பெயர்கள் விடுபட்டிருப்பதாக இவ்வலுவலகத்திற்கு பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

ஆகையால், தகுதியான நபர்களுக்கு வீடு வழங்கும் வகையில் வெள்ளத்திற்காக நிவாரண தொகை வழங்கப்பட்டு விடுபட்ட நபர்களின் பெயர் பட்டியலை இவ்வலுவலகத்திற்கு தந்து உதவுமாறும், மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட சிலுவைப்பட்டிமெயின் ரோட்டில் 190/2 என்ற சர்வே எண்ணில் உள்ள காதி கிராப்ட் வாாியத்திற்கு சொந்தமான நிலத்தினை வருவாய்துறை வசம் ஓப்படைத்து அவ்விடத்தினை மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு இவ்வலுவலகத்திலிருந்து கடந்த 3 ஆண்டு காலமாக பலமுறை கோாிக்கை மனு அனுப்பப்பட்டு வருகிறது.

மேற்படி பொருள் தொடர்பாக தொடர் நடவடிக்கை மேற்கொள்வதற்காக அறிக்கை சமர்ப்பிக்குமாறு வட்டாட்சியர், தூத்துக்குடி அலுவலகத்திற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து கடிதம் அனுப்பபட்டுள்ளதாக இவ்வலுவலகத்திற்கு தகவல் வரப்பெற்றது. ஆனால் மேற்படி பொருள் தொடா்பாக தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நாளது தேதி வரையிலும் எவ்விதமான தகவலும் இவ்வலுவலகத்திற்கு வரப்பெறவில்லை.

மேற்படிஇடத்தினை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்யும் சூழ்நிலையை ஏற்படுத்திவிடும் என்ற பொதுமக்களின் அச்சத்தினை குறிப்பிட்டும் கடந்த ஓரு ஆண்டு காலமாக இவ்வலுவலக கடிதத்திற்கு நடவடிக்கை எடுக்க எவ்விதமான முயற்சியும் மேற்கொள்ளாமல் எங்களது அலுவலகம் மூலம் அனுப்பப்படும் மனுக்கள் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. ஆகவே மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட பகுதியான சிலுவைப்பட்டி மெயின்ரோட்டில் 190/2என்ற சர்வே எண்ணில் காதி கிராப்ட் வாாியத்திற்கு சொந்தமான நிலத்தினை வருவாய்த்துறை வசம் எடுத்து மாப்பிள்ளையூரணி ஊராட்சி பொதுமக்கள் பயன் பெறும் வகையில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி நிர்வாகத்திடம் ஓப்படைக்க நடவடிக்கை எடுக்கும் படியும், மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் 59 குக்கிராமங்களில் சுமார் 1.5 லட்சம் மக்கள் வகிக்கின்றன.

ஊராட்சியில் உள்ள கிராமங்களில் பலர் குடியிருப்பு மனைகளுக்கு பட்டா வழங்கப்படாமல் இருக்கிறது. இலவச வீட்டுமனை பட்டா, வழங்கும் பொருட்டு கடந்த மே 2023 அன்று மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் சுமார் 2000க்கும் மேலான மனுக்கள் கனிமொழி எம்.பி அவர்களால் பெறப்பட்டு மனுக்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு வட்டாச்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இலவச வீட்டுமனை பட்டா வழங்க மனுக்கள் பெறப்பட்டு ஓரு வருட காலத்திற்கு மேலாகியும் இன்று வரையிலும் மேற்படி ஊராட்சி பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனை வழங்குவது குறித்து எந்த ஓரு தகவலும் வரப்பெறவில்லை. ஆகவே இவ்வலுவலகத்தின் மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு அனுப்பபட்ட மனுக்களை பாீசிலனை செய்து இலவச வீட்டு மனை கிடைக்க வழி வகை செய்து நடவடிக்கை எடுக்குமாறும், மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட பிரதானசாலை பகுதிகளில் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி தரும்படி பலமுறை இவ்வலுவலக கடிதங்கள் மூலம் ேகாரப்பட்டத்திற்கிணங்க கோட்டப்பொறியாளர் நெடுஞ்சாலைத்துறை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு சாலை எல்லையை அளவீடு செய்து தரக்கோாி தங்கள் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பபட்டுள்ளதாக தகவல் தொிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இன்றளவும் சாைல ஆக்கிரமிப்பினை அகற்றம் செய்ய தங்கள் அளவீடு ெசய்து அறிக்ைக சமர்ப்பிக்க படவில்லை. ஊராட்சியின் முக்கிய ேபாக்குவரத்து பகுதிகளாக உள்ள இடங்களில் சாலை ஆக்கிரமிப்பினால் இரண்டு மாணவா்கள் விபத்தில் உயிாிழந்ததை தொிவித்தும் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதா பொதுமக்கள் தொடர்ந்து புகார் தொிவித்து வருகின்றன.

ஆகவே மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியின் முக்கியமான பிரதான சாலை பகுதிகளில் விபத்துக்கள் நடைபெறுவதை தடுக்கும் வண்ணம் பொதுமக்கள் நலன் கருதி பிரதான சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை போர்கால அடிப்படையில் அகற்றம் செய்ய கோாிய கோாிக்கைகளை நிராகாிக்காமல் மேற்படி ஊராட்சி பகுதியில் உள்ள தாளமுத்துநகர் மெயின்சாலை பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றம் செய்ய நடவடிக்கை எடுத்திடவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

என்று இவ்மனுவில் தொிவித்துள்ளார். தூத்துக்குடி வருவாய் ஆய்வாளர் சரவணவேல்ராஜ், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, உள்பட அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story