கால்வாய் உடைப்பை நிரந்தரமாக சீரமைக்கக் கோரி மனு 

கால்வாய் உடைப்பை நிரந்தரமாக சீரமைக்கக் கோரி மனு 

தோவாளை கால்வாய் உடைப்பை சீரமைக்குமாறு, முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமாரி எம்எல்ஏ.,வுமான தளவாய் சுந்தரம் தலைமையில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

தோவாளை கால்வாய் உடைப்பை சீரமைக்குமாறு, முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமாரி எம்எல்ஏ.,வுமான தளவாய் சுந்தரம் தலைமையில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த பலத்த மழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டு விவசாயிகள் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர். இதில் தோவாளை கால்வாயில் துவச்சி என்ற பகுதியில் உடைப்பு ஏற்பட்டு, பின்னர் தற்காலிகமாக உடைப்பு சரி செய்யப்பட்டு மீண்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் அதே இடத்தில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் விவசாயிகள் பெரும் பாதிப்பில் உள்ளார்கள்.

தண்ணீர் கிடைக்காமல் சுமார் 300 ஏக்கர் பாசன நிலங்கள் வறட்சிக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பயிர்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்த கால்வாயை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமாரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரம் தலைமையில் குமரி மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதியப்பன், ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story