குமாரபாளையத்தில்  ஜன.28ல் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு மனு

குமாரபாளையத்தில்  ஜன.28ல் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு மனு

மாவட்ட ஆட்சியரிடம் மனு

குமாரபாளையத்தில்  ஜன. 28ல் ஜல்லிக்கட்டு நடக்க அனுமதி கேட்டு மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜன. 28ல் 8வது ஆண்டாக ஜல்லிக்கட்டு நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

இது குறித்து அரசிதழில் வெளியிட செய்து, ஜன. 28ல் ஜல்லிக்கட்டு நடத்திட அனுமதி வழங்க வேண்டி, ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் வினோத்குமார், நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமாவிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கவுள்ளதாக விழாக்குழுவினர் தெரிவித்தனர்.

Tags

Next Story